திருகோணமலை, நிலாவெளி – சாம்பல்தீவு பகுதியிலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில்
சக நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச் சென்று பின்னர் தாமரைப்பூ பறிக்கச்
சென்ற போது அவர் நீரில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது.
இச் சடலம்
திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்
நிலாவெளி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.