இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார நெருக்கடியால் பாதிப்பிற்குள்ளான 650 குடும்பங்களுக்கு தலா 20கிலோ வீதம் அரிசி பொதிகள் வழங்கப்பட்டன.