கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார்.
உலகின் 23 நாடுகளைச் சேர்ந்த 61 பாடசாலையை சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இதில் 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ரித்மிதா தெஹாஸ் 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கஜகஸ்தானின் பாடசாலை வீரர்கள் பெற்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் 9 சுற்றுகளில் இருந்து புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த ரித்மிதா தெஹாஸ், தன்னை விட அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.