பலவந்தமாக பெண் ஆசிரியரை முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது .

 


மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடவட பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த தனியார் பாடசாலையில் ஆங்கில கற்பித்தலுக்கு பொறுப்பான 23 வயதுடைய ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆசிரியையை சந்தேகநபரான அதிபர் பலவந்தமாக முத்தமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.