விலை குறைப்பு செய்யாத வர்த்த நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை.

 


பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் விலை குறைப்பு செய்யாத வர்த்த நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெடுக்கவும் அவ்வாறான வர்த்தக நிலையங்களை இழுத்து மூடவும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக வர்த்தகதுறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு அரிசிப்பொதிகளை வழங்கும் பணிகளை வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு தலா 20கிலோ வீதம் அரிசியினை வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.


முண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த அரசியினை வழங்கிவைத்தார்.