பணத்துடன் தனிமையில் சென்ற நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 


வாழைச்சேனை - புணானை காட்டுப் பகுதியில் பணத்துடன் தனிமையில் சென்ற நபர் ஒருவர் மீது நேற்று மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரிதிதென்னை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி பெருந்தொகை பணத்துடன் சென்ற நபர் மீதே இந்த கொலைவெறி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனிமையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது புணானை - பொத்தானை பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியிலுள்ள காட்டுப் பகுதியில் முகமூடி அணிந்தவாறு நின்ற நபர் மரக் கட்டை ஒன்றினால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இவ்வாறு பணத் தொகையுடன் தாக்குதலுக்குள்ளான நபர் கொள்ளையனிடமிருந்து   தப்பிச் சென்றுள்ளார்.

எனினும் பலத்த காயங்களுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.