கல்குடா மற்றும் சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனினின் வட திசை நோக்கிய நகர்வின் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு உச்சம் கொடுக்கவுள்ளது.

அதன்படி, இன்று (10) மதியம் 12:11 அளவில் ஆனைமடுவ, தம்புள்ளை, பெல்லன்வெல மற்றும் கல்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.