ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு.

 


கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வர தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு
அடியார்கள் புடை சூழ வேத நாதம் முழங்க பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
 காலை விநாயகர் வழிபாடுகளுடன் கிரிகைகள் ஆரம்பமாகி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச திவிசாந்த குருக்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
ஆலய மகோற்சவ காலங்களில் தினமும் காலை விநாயகர் வழிபாடுகளுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை, மாலை அபிஷேகத்துடன் பூஜைகள் இடம்பெற்று
இரவு திருவிழா இடம்பெறும்.
ஆலய வருடாந்த மகோற்சவத்தின் எதிர்வரும் 03.05.2023 ஆம் திகதி திருவேட்டை திருவிழாவும், 04.05.2023 ஆம் திகதி தேர் திருவிழாவும், 05.05.2023 ஆம் திகதி நண்பகல் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குலத்தில் தீர்த்ததோற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.