சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் -ஜனாதிபதி

 


 

 சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னெடுக்கும் பணிகளின்போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த நாம் அனைவரும் உறுதிபூணவேண்டும்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.