மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இவ்வருட (2023) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற புற்றுநோய்கள் தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு அண்மையில் (04) இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.ஜே. திருச்செல்வம் தலைமையில் கறுவாக்கேணி சமூக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு குடும்ப கட்டுப்பாட்டு அமைப்பின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுகாதார வைத்திய அதிகாரி வளவாளராக பங்கேற்று அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய், தொற்றா நோய்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய தற்கால உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பாக தெளிவு படுத்தினார். அத்துடன் விழிப்புணர்வுடன் கூடிய செயன்முறை பரிசோதனைகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்
இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தாதிய அலுவலர், செயலக பெண் உத்தியோகத்தர்கள், பிரதேச பெண்கள் என பலரும் கலந்துகொண்டனர்.