அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களின் ஒலி பெருக்கிகள் பரிசீலிக்கப்பட்டன.

 


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களின் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இன்று கோபுரங்களில் இருந்து ஒலி எழுப்பப்பட்டு கோபுரங்களின் ஒலி பெருக்கிகள் பரிசீலிக்கப்பட்டன.

களுவங்கேணி, காத்தான்குடி, புதுக்குடியிருப்பு போன்ற முன்னெச்சரிக்கை கோபுரங்களின் ஒலி பெருக்கிகள் பரிசீலிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அனுசரணையுடன் 233இராணுவ படைப்பிரிவின் இராணு அதிகாரிகள் இதனை பரிசீலிக்கும் நடைவடிக்கையில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரம் பரிசீலிக்கப்பட்டு மதியம் 12.50 மணியளவில் பரிசீலிப்பு ஒலி எழுப்பப்பட்டது.

இதன் போது இராணுவத்தினர் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் அங்கு சமூக மளித்திருந்தனர்.