பதுளை – தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற அனைத்து கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
பதுளை – தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 9 பேர் நேற்று (17) தப்பிச் சென்றனர்.
போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களே இந்த புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.