மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!!

 










மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (11) திகதி மாலை இடம்பெற்றது.
கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவதத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது மஃஹதுஸ் சுன்னா மகளிர் அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் மெளளவி எம்.எம்.எம். மன்சூர் அவர்களினால் புனித ரமழான் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஶ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், சமுர்த்தி கணக்காளர் எம்.எஸ்.பசீர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த இப்தார் நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.