யூடியூப்பை பார்த்து தனக்கு தானே கருச்சிதைவு செய்துகொள்ள முயன்றாரா?

 

 


மாணவி ஒருவர் வகுப்பறையில் கருக்கலைக்க முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில நெல்லூரில் மரிபாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி( 19 வயது) தனியார் கல்லூரியில் பிடெக் படித்து வந்தார். இம்மாதம் 11 ஆம் திகதி அனைத்து மாணவ்ர்களும் கல்லூரி வளாகத்தில் வகுப்பிற்கு வெளியே வந்தனர். அப்போது, இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனியே இருந்துள்ளார். 

 நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால், சக மாணவிகள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, அப்போது இரத்தப்போக்குடன் மாணவி மயங்கிக் கிடந்துள்ளார். அந்த மாணவிக்கு அருகே ஆறு மாத பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே மாணவியையும் அந்த கருவையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாணவி, யூடியூப்பை பார்த்து தனக்கு தானே கருச்சிதைவு செய்துகொள்ள முயன்றாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.