வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிறிஸ்தவ சபை ஒன்றினால் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக மேற்படி கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதே அதனை அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.
"சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான இந்தச் செயற்பாடு தடுக்கப்படவேண்டும் எனவும் கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டதா? என்பதன் ஊடாக அதனை அணுகுவது சிறந்தது எனவும் வலி.கிழக்கு பிரதேச சபையின் அப்போதைய தவிசாளர் நிரோஷ் சபைக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கிறிஸ்தவ சபைக் கட்டடம் அமைப்பதற்கு வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனினும் அதுதொடர்பான உத்தியோகபூர்வ தகவலைப் பெற முடியவில்லை.