மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு!!

 









மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் இன்று (26) கோவில் குளத்தில் உள்ள கல்லுரி வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ''இரத்த தானம் செய்து ஒரு உயிரை காப்பாற்ற ஒன்றிணைவோம்'' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமிற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் அனுசரணை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், கல்லூரியின் மாணவ, மாணவிகள் என பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.