அரசாங்கத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும், அம்பாறை மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில், பொருட்களின் விலைகள் அதிக அளவில் காணப்பட்டது.
எரிபொருட்கள் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டு உள்ளதோடு, தற்பொழுது நாட்டில் ஓரளவுக்கு பொருளாதாரம், சீரடைந்து வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பொருட்களுக்கு இதுவரையும் விலைகள் குறைக்கப்படவில்லை எனவும், புத்தாண்டு காலப்பகுதியில் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரவிக்கின்றனர்.
போக்குவரத்து செலவுகள் குறைவடைந்துள்ள நிலையில் குறிப்பாக, உணவுப் பண்டங்களிலும் சீனி, மாவு ஏனைய சில பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை.
வர்த்தக நிலையங்களில், பொருட்களின் கட்டுப்பாட்டு விலை தொடர்பான பட்டியல் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இது தொடர்பாக விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.