மட்டக்களப்பு மாவட்டத்தில் விஷேட டெங்கு கட்டுப்பாடு செயற்பாடுகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் விசேட டெங்கு கட்டுப்பாடு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்கள் அதிகமாக இணங்காணப்பட்ட பிரதேசங்களான கோட்டைமுனை, வெட்டுக்காடு, கொக்குவில் மற்றும் இருதயபுரம் ஆகிய பிரதேசங்களில் சுகாதார அதிகாரிகள், பொலிசார் மற்றும் மாநரை சபை ஊழியர்கள் உள்ளடங்கிய குழுவினரால் வீடு வீடாக சென்று பரிசோதிக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு உரிவாகும்வண்ணம் பராமரிக்காமல் காணப்பட்ட வீடு மற்றும் வெற்றுக்காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை ஒட்டப்பட்டதுடன், சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது நீர் தேங்கியிருக்கும் கொள்கலன்கள், சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டதுடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் இருந்து டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முன் வர வேண்டும் என இதன் போது வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் பிரதேச வாசிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.