தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் மட்டக்களப்பு பாசிக்குடா காம் சுற்றுலா வலயப்பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

 


 

தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் மட்டக்களப்பு பாசிக்குடா காம் சுற்றுலா வலயப்பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ், சிங்கள மக்களின் கலாசார பாரம்பரிய உணவு பரிமாற்றம், விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய வகையில் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

யானைக்கு கண் வைத்தல், தலையணை சமர், முட்டி உடைத்தல், பணீஸ் உண்ணுதல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், பலூன் பரிமாற்றம், சங்கீத கதிரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் பங்குபற்றியதுடன் இப்போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.