இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையே மோதல், ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 


 

 கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு விழா ஒன்றின் இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு தரப்பைச் சேர்ந்த நால்வரும், மற்றைய தரப்பினரை சேர்ந்த இருவர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.