கல்லடி புதுமுகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்திற்கு போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு பாடசாலையின் அதிபர் வி.தவேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட போட்டோப் பிரதி இயந்திரமே இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.