நாட்டில் நேற்று (19) அதிகளவான எரிசக்தி தேவை பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மின் உற்பத்திக்கு நேற்று 49.53 GWh தேவை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இன்று (20) மின்சாரத் தேவை 50 GWh தாண்டும் என தாம் கணிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.