குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒருதொகை தங்கத்தை அகழ்வற்கு முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் இருக்கும் இடத்தை கண்டறியும் அதிசக்திவாய்ந்த ஸ்கேன் இயந்திரத்துடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே, கரடியனாறு பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில் ஒருவர் பொலிஸ் அதிகாரி என்றும் ஏனைய மூவரும் வர்த்தகர்கள் என்றும் அறியமுடிகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர், மிரிஹான பொலிஸில் இணைந்ததாக கடமையாற்றுகின்றார். சுகயீன விடுமுறையை பெற்றுள்ளார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது