மூன்று காட்டு யானைகள் ரயிலில் மோதியதில் ரயில் தடம் புரண்டது , போக்கு வரத்து பாதிப்பு .

 


ரயில் தடம் புரண்டதால், கிழக்கு ரயில் வீதியில் ரயில்களின் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் பலுகஸ்வெவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூன்று காட்டு யானைகள் ரயிலில் மோதியதில் ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.