எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவே காரணம் என்றும் ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட
நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கி நிறுத்துகிறார் என்றும் ஐக்கிய
தேசியக் கட்சியின் தவிசாளரும் எம்.பியுமான
வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
வஜிர எம்பி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரத்துக்கு பின்னர் நாடு பிளவுபட்டு பிரிந்தது என்றும் பல்வேறு சித்தாந்தங்களால் அது சரிந்துவிட்டது என்றும் குறிப்பிட்ட அவர், வங்குரோத்து அடைந்த நாட்டை ஜனாதிபதியே தூக்கி நிறுத்துவதாக சுட்டிக்காட்டினார்.
அதற்கு முழு இலங்கை மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், ஏனைய விடயங்களைச் செய்வதன் மூலம் வேலைத்திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்தால் அதற்கு அந்தக் குழுக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.