கடினப்பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!




(ஆர்.நிரோசன்)





மட்டக்களப்பு இருதயபுரம் எவர்கிறீன் மைதானத்தில் மண்முனைவடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வளர்ந்து வரும் தலைசிறந்த கழகங்கள் ஆன கோல்டன்யிகள் மற்றும் எவர்கிறீன் விளையாட்டுக் கழகங்களுக்கான கொள்வனவு செய்யப்பட்ட கடினப் பந்து விளையாட்டு உபகரணங்கள் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் வழங்கி வைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசு கட்சியின் மட்டக்களப்பு தொகுதி இணைப்பாளர் வை.தினேஷ் குமார் சிந்தனைக்கமைய  மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்
கிராமமொன்றின் ஒற்றுமையை பலப்படுத்துவது விளையாட்டாகும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
அவர்களது திறமைகளை வெளிக்காட்ட பொருத்தமான முறைகளில் எமது பிரதேசங்களில் கடினப்பந்து கிரிக்கெட் விளையாட்டுத்துறையினை  சரியான வழிநடத்தல்  
என்ற தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான கடினப்பந்து விளையாட்டு உபகரணங்கள் இரு கழகங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் விளையாட்டுக் கழகங்களின் மூத்த உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.