சித்திரை வருடப்பிறப்பான இன்றயத்தினம் மாலை மட்டக்களப்பு - களுதாவளைக் கடற்கரையில் இளைஞர்கள் சிலர் சிறியரக படகு ஒன்றை மிகவும் வேகமாக ஓட்டினர்.
இதேவேளை படகை ஓட்டிய இளைஞர்கள் சற்று நேரத்தில் கரைசேர்த்திருந்தனர். பின்னர் மீண்டும் கடலில் படகை இறக்குவதற்குத் தயாரான நிலையில் கடற்கரையில் நின்ற இன்னும் சில ஆண்களும், பெண்களும், ஏறினர்.
பின்னர் பொங்கிவந்த கடலலையில் படகு கரையை நேக்கி தூக்கி வீசப்பட்டது. இதனால் படகிலிருந்த ஆண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். அவருக்கு மேலே படகு வீழ்ந்துள்ளது. இதனால் அவர் உபாதைக்குட்பட்ட நிலையில் கரையில் நின்றவர்களால் மீட்கப்பட்டார்.
கரையை நோக்கி படகு அலையினால் தூக்கி வீசப்பட்டத்தில் படகிலிருந்த ஏனைய ஆண்களும், பெண்களும், மிகவும் தெய்வாதீனமாக கரையிலிருந்தோரால் காப்பாற்றப்பட்டனர்.
இதனால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தில் தெய்வாதீனமாக அனைவரும் காப்பாற்றப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.