உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு தயார்- இலங்கை ஆசிரியர் சங்கம்

 


உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக வழங்கப்படும் உதவித்தொகை போதாது எனக் கூறி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகியிருந்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர்கள் கோரிய உதவித்தொகையை வழங்க கல்வி அமைச்சு சம்மதம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்ல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.