கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த உதயதேவி ரயில், கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் உதவி கட்டுப்பாட்டாளர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது