பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி மின்சார கட்டணத்தை உடனடியாக முப்பது வீதத்தால் குறைக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்தார்.
எனினும், எரிபொருள் விலைக் குறைப்பின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.