மாதாந்தம் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் 3 கோடி முட்டைகள் வரை இறக்குமதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் போதுமான அளவு முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வெளியிடும் திறன் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் என்றார்.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 10 இலட்சம் முட்டைகளுடன் இதுவரை மொத்தம் 30 இலட்சம் முட்டைகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.