இலங்கையில் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலனை .

 


 

இலங்கையில் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, தற்போது இரத்மலானை தொடரூந்து பணி வளாகத்தில் இயங்கி வரும் ஜேர்மன் தொடரூந்து தொழில்நுட்ப பயிற்சி நிலையத்துடன் ரஷ்யா மற்றும் பெலாரஸ் போக்குவரத்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இலங்கையில் போக்குவரத்து பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.