யோகா,தியானம் ஆகியவற்றை
இருபத்தோராம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு
வடிவமைத்து, அத்துடன் பழம்பெரும்
ஞானத்தையும் மீண்டும் கட்டியெழுப்பியுள்ளார்
வாழும் கலையமைப்பின் ஸ்தாபகர் குருஜீ
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜீ அவர்கள். 1981ம் ஆண்டு
ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக
உருவாக்கப்பட்ட இவ் வாழும்கலை
அமைப்பானது 175 நாடுகளுக்கு மேலாக
பரவியுள்ளது. தனிமனித, சமுதாய
மாற்றங்களுக்காக பல புதிய நுட்பங்களையும்
தந்துள்ளார் .
குருஜீ அவர்கள் .வாழும்
கலையமைப்பின் பல சேவைகளுள் ஒன்று
பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான
இல்லங்களை நடாத்துவதாகும். இலங்கையில்
மட்டக்களப்பிலும், வெள்ளவாயாவிலும் வாழும்
கலையமைப்பின் சிறுவர் இல்லங்கள்
இயங்கி வருகின்றன .மட்டக்களப்பிலுள்ள
சிறுவர் இல்லத்திற்கு டுபாயிலுள்ள IAHV
அமைப்பானது ஆதரவினை வழங்கி
வருகின்றது.
சுதர்சன கிரியா என்னும் தாளத்துடன் கூடிய
மூச்சுப்பயிற்சி வாழும்கலையமைப்பின்
சிறந்ததொரு பயிற்சியாகும்.
கோடிக்கணக்கான மக்கள் இப்பயிற்சியால்
மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டது
மட்டுமல்லாது அவர்கள் தமக்குள் உள்ள
அமைதியையும்;, தமக்குள் உள்ள
சக்தியையும் உணர்ந்துள்ளார்கள் .இப்பயிற்சி
நெறியானது பெரியவர்களுக்கு மட்டுமன்றி
சிறியவர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8 வயதிலிருந்து 12 வயது வரை ஆர்ட்
எக்சல் ((Art Exel ) என்னும் பயிற்சி
நெறியும், 13 வயதிலிருந்து 17 வயது வரை
Yes என்னும் பயிற்சியும், இவற்றைவிட
இளைஞர்களுக்கான தலைமைத்துவப்
பயிற்சியும், பெரியவர்களுக்கான ஆனந்த
அனுபவம் என பல பயிற்சிநெறிகள்
உள்ளன. இப்பயிற்சி நெறிகள் யாவும் எமது
நாட்டில் மட்டுமல்லாது 175 நாடுகளில்
பரப்பப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு
வருகின்றது. தற்போது வாழும்கலையமைப்பின் சிறுவர்களுக்கானதொரு
பொக்கிஷமாக சிறுவர்கள் தமது
உள்ளுணர்வை வெளிக்கொணரும் பயிற்சி
நெறியானது வழங்கப்பட்டு
வருகின்றது. இப்பயிற்சி நெறியினை
பின்பற்றிய சிறுவர்கள் சரியான நேரத்தில்
சரியான முடிவை எடுப்பதற்கு இந்த
பயிற்சி மிகவும் உதவுகின்றது.
இது மட்டக்களப்பு, திருகோணமலை,வெள்ளவாயா
ஆகிய இடங்களில் நடாத்தப்பட்டு
வருகின்றது.இப்பயிற்சி நெறியால் பல
சிறுவர்கள் பல நன்மைகளைப்
பெற்றுள்ளனர். தங்களது தலைக்குப் பின்னால்
நடக்கும் விடயங்கள் , குறித்த வினாவுக்கான
விடை புத்தகத்தின் எந்த பக்கத்தில்
எத்தனையாம் வரியில் உள்ளது மற்றும்
கண்களை மூடியவாறே எதிரில்
காண்பிக்கப்படும் காட்சியோ, படமோ
எவ்வாறானது என்பதை மிகவும் சுலபமாக
எதிர்வு கூறக்கூடியவர்களாகத் திகழ்கின்றனர்.
இப்பயிற்சி நெறியானது மட்டக்களப்பு மைலம்பாவெளி நம்பிக்கைக் கிராமத்தில் நடாத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளையே இங்கு
காண்கின்றீர்கள் .நீங்கள் உங்களது
குழந்தைகளுக்கு இவ்வருடம்
கொடுக்கக்கூடிய புத்தாண்டுப்பரிசு இப்பயிற்சி
நெறியினை தவிர வேறெதுவும்
இருக்கமுடியாது என்பதில் எதுவித
ஐயப்பாடுமில்லை.
.