கல்லூரியின் அதிபராக எம்.ஏ.நிஹால் அஹமட் பொறுப்பேற்றதையடுத்து கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.
எமது காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வானது, மத்திய கல்லூரியினுடைய அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றம் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் கிளையினுடைய பணிப்பாளர் மேஜர் என்.ரி. நஜுமுதீன்,
மட்டக்களப்பு மத்தி வயலக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர்,
காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். கலாவுதீன், மட்டக்களப்பு மத்தி வலய ஆசிரிய ஆலோசகர்கள், கல்லூரியினுடைய ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நுஸ்ரி நளீமி கலந்து கொண்டு ரமழான் தொடர்பான காத்திரமான உரையொன்றை நிகழ்த்தினார்கள்.
இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் இலக்காக கொண்டு இந்த நல்லுறவு இப்தார் நடாத்தப்பட்டது.
இதில் பாடசாலையில் கற்பிக்கும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் தமது குடும்ப சகிதம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.