இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய நபர் மீது பொலிஸார் வலை வீச்சு .

 


இலங்கைக்கு சுற்றுலா வந்து அக்குரணையில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரின் பயணப் பொதியிலிருந்த சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் 112,000 ரூபா பெறுமதியான பணம் என்பவற்றை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய சுற்றுலாப் பெண் தங்கியிருந்த விடுதியின் முகாமையாளர் கடந்த 25ஆம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவற்றைத் திருடிய சந்தேகநபர் குறித்த தகவல்களைக் கண்டறிந்து அவரைக் கைது செய்ய காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.