வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
வெளியில் நடமாடும் ஆடுகள், மாடுகள் போன்ற விலங்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர்கள் ஊடாக கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.