வரிகளை படிப்படியாக குறைக்க முடியாது -பந்துல குணவர்தன

 


வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டளையொன்று உள்ளதாகவும், வரிகளை படிப்படியாக குறைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உலகத் தரமான வங்கிக் கொள்கைகளின்படி செயல்படும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஒழுங்கு உள்ளது. 

வருமானம் ஈட்டும் போது வரிகள் தொடர்பாக எந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் முறைசாரா முறையில் வரிகளைக் குறைக்க முடியாது என்றார். R