தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவகுமாரின் ஒழுங்கு படுத்தலின் கீழ் இடம் பெற்ற இந் நிகழ்வில் அதிகளவான பெண் தலைமைதாங்கும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் நஞ்சற்ற உணவு வகைகளையும் எமது பாரம்பரிய உணவு வகைகளும் காட்சி படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இதன் போது எமது பாரம்பரிய உணவுகளான தானியவகைகள், கீரைகள், மற்றும் தினை, உளுந்து, பயற்றை, குரக்கன், சோளன் போன்றவற்றில் செய்யப்பட்ட உணவுகள் மற்றும், மா வகைகள் விற்பனை செய்யப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைதாங்கும் குடும்பத்தினரின் சுயதொழிலினை மேம்படுத்துவத்தினுடாக அவர்களின் வாழ்வாதாரத்திதை உயர்த்துவதனை நோக்கமாக கொண்டு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.