ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு காரணமான பயங்கரவாத தடைச்சட்டமானது
இன்னொரு முகமூடியில் மேலும் பலம் கொண்டு வருவதை மக்களால் ஒருபோதும்
அனுமதிக்க முடியாது என வடகிழக்கு மாகாண பெண் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக
கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை கைவிடுமாறு வலியுறுத்தி
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கில்
உள்ள எட்டு மாவட்டங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று
மட்டக்களப்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாண
பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு
பெண்கள் அமைப்புகளிலுமிருந்து பெண்கள் இந்த போராட்டத்தில்
கலந்துகொண்டதுடன் இறுதியாக மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு மட்டக்களப்பு
மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.