இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில், இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 


இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் நிலநடுக்கம், 6.1 மெக்னிடியூட் அளவிலான கெபுலாவான் பட்டுவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக  ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.