தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு .

 


நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு மு ன்னதாக நாட்டில் 170 இற்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.