இலங்கை மத்திய வங்கியினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316 ரூபாய் 75 சதமாகவும் விற்பனை விலை 334 ரூபாய் 20 சதமாகவும் நேற்றைய தினத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (31) ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளதுடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளது.