பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் இரவு நேரத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்கான இரவு நேர சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக பல விசேட சுற்றிவளைப்பு குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும நேற்றிரவு 151 சோதனைகளை அதிகாரிகள் நடத்தியதாகவும் அதில் முட்டை தொடர்பான 51 சோதனைகள் மேற்கொள்ளப்ப்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுமுறை நாட்கள் உட்பட நாடு முழுவதும் இந்த சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் பண்டிகைக் காலத்துக்கான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1,250 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.