தற்போதைய அரசாங்கத்தை இறுதி நாள் வரை கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 126க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மொட்டுக் கட்சிக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அத்தியாவசியமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.