மட்டக்களப்பு பட்டிருப்பு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட 70 பாடசாலைகளிலுள்ள அதிபர்,ஆசிரியர்கள்,விளையாட்டுபயிற்றுவிப்பாளர்களுக்கான
விளையாட்டு போட்டி களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
வலயக் கல்விப்பணிப்பாளர் சிறீதரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பிரதம செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம்
கலந்துகொண்டார்.
பேண்ட் வாத்தியம்,அணிநடை,உடற்பயிற்சிகண்காட்சி என்பன இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற அதிபர்,ஆசிரியர்களுக்கு
பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டு போட்டியில்,உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் தயகுமார் ,டாக்டர் மயூரேசன், ஒய்வுநிலைவலயக்கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன்,
வலயக்கல்விஉத்தியோகத்தர்கள்,அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.