பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று (09) மாலை 5.30 வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.