வடகிழக்கில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,
ஞா.சிறிநேசன், தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி தலைவி க.ரஞ்சினி ஆகியோர்
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே
இந்த அழைப்பினை விடுத்தனர்.