கள் இறக்குபவர் மரத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது

 


கித்துள் மரத்தில் ஏறிய கள் இறக்குபவர் மரத்திலேயே உயிரிழந்ததுடன் பொது மக்களின் உதவியுடன் பொலிஸார் சடலத்தைக் கீழே இறக்கிய சம்பவம் ஒன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த நபரான 63 வயதான ரணசிங்க வீரக்கொடி பிட்டிகல, பொரொகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். வீட்டின் முன் நின்ற கித்துள் மரத்தில் ஏறியவர் மரத்திலேயே உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.  

அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக எல்பிட்டிய நீதிமன்ற மருத்துவ அதிகாரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.