உலக சித்தர் தினத்தினை முன்னிட்டு, சித்த மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வு நேற்று மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்றது.
சித்த மருத்துவத்தின் சிறப்பு, மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நிகழ்வு இடம்பெற்றது.’சித்த மருத்துவ விழிப்புணர்வு’ எனும் தொனிப்பொருளில் நிகழ்வு நடைபெற்றது.
கிராம அபிவிருத்தி சங்கம் மேற்கு,கிழக்கு மற்றும் அகில உலக இளம் சைவ மன்றத்தினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயர் தலைமையில் இடம்பெற்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் லாபிர், ஆயுர்வேத சித்த வைத்தியசாலை ஏறாவூர் வைத்தியர் நிலோஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.