மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகம் இடம்பெற்றது.

 


மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் விருஸ், வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்